2012-02-09 15:16:39

கவிதைக் கனவுகள்........ உடற்பயிற்சி


அளவான உணவு
ஆரோக்யமான உணவு
மென்று தின்ற உணவு
தவறாத தேகப்பயிற்சி
இவைதரும் பரிசு
நோயற்ற வாழ்வு

மிகுதியான சுவை
நாக்கிற்கு இலஞ்சம்.
நோய்க்கு நுழைவாயில்.

அவசரமான உலகில்
அன்றாடம் அரைமணி நேர
நடைப்பயிற்சி
உடலுக்குச் சுகம்
மனதிற்கும் சுகம்

கணினியில் கண்விழித்து
கணினியோடு உறங்கும் உள்ளத்துக்கு
கட்டாயம் தேவையாம்
தினமும் பதினைந்து நிமிட உடற்பயிற்சி
உறுதிபடச் சொல்கிறார்கள்
ஜெர்மன் நரம்பியல் நிபுணர்கள்.
ஆராய்ந்தார்களாம்
நான்கு இலட்சம் தாய்வானியரிடம்.

உடற்பயிற்சி ஆயுளைக் கூட்டுகிறதாம்
கூடுதல் முப்பத்தாறு மாதங்களுக்கு.
ஸ்ட்ரோக்கும் நீரிழிவும்
புற்றுநோயும் இதய நோயும்
பற்றிக் கொள்ளப் பயப்படுகிறதாம்.
சளிப்பிரச்சனை முப்பது விழுக்காடு குறைகிறதாம்
தொப்பை மறைகிறதாம்
உடல் எடையும் சீராகி
உள்ளத்துக்கும் உரமூட்டுகிறதாம் – இது
இலண்டன் மருத்துவர்கள் கணிப்பு

ஆனால் எச்சரிக்கை!
அதிக உடற்பயிற்சி
ஆபத்து உடலுக்கு.
அளவோடு மருத்துவ
அறிவுரையோடு ஈடுபடுவது
நோயற்ற வாழ்வுக்கு நல்வழி.







All the contents on this site are copyrighted ©.