2012-02-04 15:33:19

கவிதைக் கனவுகள்... பக்குவப்பட்ட மனமே அச்சாணி


இன்பம், துன்பம்...
நமக்குள்ள இரு கண்கள் என்பர்
இருகண்கள் என்றால்...
இன்பத்தில் இருகண்ணிலும் மின்னல்
துன்பத்தில் இருகண்ணிலும் கண்ணீர்
ஒரு கண்ணில் மின்னலும்
ஒரு கண்ணில் கண்ணீரும்
ஒரு நாளும் இயலாத உண்மை

பகலின் அர்த்தம் இரவே தரும்
மலையின் அர்த்தம் மடுவே தரும்
கதிரின் அர்த்தம் களையே தரும்
இன்பத்தின் அர்த்தம் துயரே தரும்
இன்பம் மட்டுமே என்றால், அது துயரே தரும்.
கேட்கப் பிடிக்கும் வார்த்தைகள் - பலமுறை
கேட்டாலும் படிக்காத பாடங்கள்

வாழ்க்கை என்ற வாகனம்
வகையோடு உருண்டோட
வாகையோடு உருண்டோட
இன்பம் துன்பம் என்ற
இரு சக்கரங்களும் தேவை
இவ்விரண்டையும் பக்குவமாய் இணைக்க
பக்குவப்பட்ட மனமே அச்சாணி...








All the contents on this site are copyrighted ©.