2012-02-04 15:28:21

50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும், சிவகங்கையில் அறிவியலாளர் எச்சரிக்கை


பிப்.04,2012. "அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில், 20 நாடுகள், உலக வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என அறிவியலாளர் ராம்ஜி எச்சரித்தார்.
"கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' என்ற தலைப்பில் சிவகங்கையில் நடைபெற்ற பயிற்சிப் பாசறையில் உரையாற்றிய, மாநில சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் தலைவரான ராம்ஜி இவ்வாறு பேசினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு, "பரியாவரன் மித்ரா' என்ற திட்டத்தை துவக்கியுள்ளது எனவும், இத்திட்டம் குறித்த கருத்துக்கள், ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சேர்க்கப்படுகின்றன எனவும், அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
பன்னாட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 50 அல்லது 100 ஆண்டுகளில், உலகில், 20 நாடுகள், வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது, இவற்றில் இந்தியா உட்பட 16 தென்கிழக்கு ஆசிய நாடுகள் அடங்கும் என்று பேசிய ராம்ஜி, கடந்த 200 ஆண்டுகளில், உலகளவில், 1.5 செல்சியஸ் வெப்பமும், 20 செ.மீ., கடலரிப்பும் அதிகரித்துள்ளன என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.