2012-02-02 15:29:35

மியான்மார் உள்நாட்டுப் போரினால் புலம் பெயர்ந்துள்ள 60,000க்கும் அதிகமான மக்களுக்கு தலத்திருஅவை உதவி


பிப்.02,2012. மியான்மார் இராணுவத்திற்கும், கச்சின் பகுதி விடுதலைப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தலத்திருஅவை செய்து வரும் முயற்சிகளில், அவர்களுக்கு உணவு வழங்குவதே பெரும் பிரச்சனையாக உள்ளது என்று மியான்மார் அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.
2011ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த உள்நாட்டுப் போரினால் இதுவரை புலம் பெயர்ந்துள்ள 60,000க்கும் அதிகமான மக்கள் பங்குத் தளங்களிலும், பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்களிலும் தங்க வைக்கப் பட்டுள்ளனர் என்று பங்குத்தந்தை Luke Kha Li கூறினார்.
கச்சின் பகுதியின் தன்னாட்சிக்காகப் போராடும் குழுக்கள் மியான்மார் அரசுடன் அரசியல் பேச்சு வார்த்தைகள் நடைபெறும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று கூறி வருவதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.