2012-01-27 15:43:25

போபால் விஷவாயு விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் ஒலிம்பிக் மேற்பார்வையாளர் தீர்மானத்திற்கு வரவேற்பு


சன.27,2012. Dow வேதியல் நிறுவனம், 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு நிதியுதவி செய்வதையடுத்து, இந்த இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கவனிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர் அப்பொறுப்பிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்திருப்பதை போபால் விஷவாயு விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டு மேற்பார்வையாளர் Meredith Alexander என்பவர் இப்பொறுப்பிலிருந்து விலகுவதாக இவ்வியாழனன்று அறிவித்திருப்பதை மகிழ்ச்சியோடு அவர்கள் வரவேற்றுள்ளனர்.
1984ம் ஆண்டு விஷவாயுக் கசிவுக்கு உள்ளான போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தை 2001ம் ஆண்டு Dow வேதியல் கம்பெனி வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள Dow நிறுவனம், வேதியப் பொருட்களைத் தயாரிப்பதில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. போபால் விஷவாயுக் கசிவினால் சுமார் 25 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.