2012-01-27 15:38:22

ஒபாமா நிர்வாகம் கர்ப்பத்தை நோயாக நோக்குகிறது : நியுயார்க் பேராயர் குறை


சன.27,2012. பெண்களின் கருவுறுதலை நோயாக நோக்காத சமய சுதந்திரக் குழுக்களை ஒபாமா நிர்வாகம் அழித்துவிட முயற்சிக்கிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன் குறை கூறினார்.
Wall Street Journal தினத்தாளில் ஆசிரியர் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ள, நியுயார்க் பேராயர் டோலன், கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வொருவரின் மனச்சான்றின் சுதந்திரம் உட்பட சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல புதிய நலஆதரவுத் திட்டங்களில், கருத்தடைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒபாமா நிர்வாகம் தீர்மானித்திருப்பது பற்றிக் கருத்து தெரிவித்துள்ள பேராயர் டோலன், கருவுறுதலை நோயாகப் பார்க்காமல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கத்தோலிக்க மற்றும் பிறரின் மனச்சான்றை மதிக்கத் தவறியுள்ளது என்று குறை கூறியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.