2012-01-25 16:17:47

கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பை ஊக்குவித்தனர் அச்சபைகளின் தலைவர்கள்


சன.25,2012. பிரித்தானிய சமுதாயத்தில், மதத்தின் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வரும் வேளை, அந்நாட்டில் கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பு ஊக்கப்படுத்தப்படுமாறு இவ்விரு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.
வளர்ந்து வரும் உலகாயுதப் போக்கின் கடும் அச்சுறுத்தல்களையும், பொதுவாக, மதம், குறிப்பாக, கிறிஸ்தவம் ஓரங்கட்டப்படும் நிலையையும் தாங்கள் எதிர்நோக்கி வருவதாக காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ஆயர் Angaelos கூறினார்.
இன்றைய உலகில் கிறிஸ்தவத்தை வாழ்ந்து அதற்குச் சாட்சியாக இருப்பதன் பொருளையும் மதிப்பையும் வாழ்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளின் உறுப்பினர்கள் என்ற முறையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை ஆயர் Angaelos வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து இவ்வாரத்தில் அறிக்கை வெளியிட்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் ஆயர் Angaelos







All the contents on this site are copyrighted ©.