2012-01-24 15:21:28

பொருளாதார வளர்ச்சி தக்க வைக்கப்பட அடுத்த பத்து ஆண்டுகளில் 60 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்


சன.24,2012. உலகில் பொருளாதார வளர்ச்சி தக்கவைக்கப்பட வேண்டுமெனில் அடுத்த பத்து ஆண்டுகளில் 60 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு.
உலகில், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில், குறைந்த ஊதியத்துடன் வேலையில் அமர்த்தப்பட்டுள்ள 90 கோடிப் பேருக்கு, நியாயமான வேலைகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கும் ஐநாவின் ILO என்ற அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு, பொருளாதார வளர்ச்சி உலகில் தக்கவைக்கப்படவேண்டுமெனில், வரும் 10 ஆண்டுகளில் 60 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அண்மைப் பொருளாதார நெருக்கடிகளால் 20 கோடிப் பேர் வேலை வாய்ப்பின்றி இருப்பதையும் ILO அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.