விடுதலைப் பயணம் தொடர்ந்திடுவோம் - புது விடியலை நோக்கி நடந்திடுவோம் நரகமே நம்மை
எதிர்த்தாலும் - நம் உறுதியின் முன்னே அது வீழும்
மனதினில் உறுதியின் சுடர்
வேண்டும் - அது கனவின் திரிகளைத் தினம் தூண்டும் நீதியின் வேட்கையில் தினம் எரியும்
- அந்த தீபங்களே இறை அரசாகும் - இந்த அரசினை வளர்த்திட அநீதி வீழ்ந்திட ஆயிரமாயிரம்
உள்ளங்கள் உயர்ந்திட விடுதலைப் பயணம் தொடர்ந்திடுவோம் - புது விடியலை நோக்கி நடந்திடுவோம்
கண்களில்
உண்மை ஒளி வேண்டும் - அங்கு மனிதரின் மாண்பு தினம் தோன்றும் மாண்புடன் வாழ்ந்திடும்
மனுக்குலமே - அந்த ஆண்டவன் விழையும் அரசாகும் - இந்த அரசினை வளர்த்திட அநீதி
வீழ்ந்திட ஆயிரமாயிரம் உள்ளங்கள் உயர்ந்திட விடுதலைப் பயணம் தொடர்ந்திடுவோம் -
புது விடியலை நோக்கி நடந்திடுவோம்