2012-01-23 16:00:28

தங்கும் அனுமதி விதிகளை மீறிய 161 இசுலாம் மதகுருக்களை வெளியேற்ற இலங்கை அரசு முடிவு


சன 23, 2012. தங்கும் அனுமதி விதிகளை மீறியக் காரணத்துக்காக 160 க்கும் அதிகமான இஸ்லாமிய மதகுருக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியுடன் பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், சில அரபு நாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த இந்த மதகுருக்கள், அனுமதியின்றி இசுலாம் சமூகத்தினருக்கு மத போதனை செய்ததாக அரசு கூறுகிறது.
அனுமதியின்றி மத போதனையில் ஈடுபட்ட இவர்கள் இம்மாதம் 31ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளது அரசு.
இவர்களது வெளியேற்றம் குறித்த முடிவுகள் தொடர்பில், இலங்கை அரசில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.