2012-01-23 15:54:25

அமெரிக்காவில் மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு பேராயர் Chaput அழைப்பு


சன.23,2012. அமெரிக்காவில் செய்யப்படும் கருக்கலைப்புக்களில் 80 விழுக்காடு, உடல் உறுப்புக் குறைபாடு கொண்ட கருக்கள் என்பதால், அந்நாட்டில் மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு Philadelphia பேராயர் Charles J. Chaput கேட்டுக் கொண்டார்.
தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளின் குரோமோசோம்களில் குறைகள் இருப்பதாய் கண்டறியப்பட்டவுடன் அவை கொல்லப்படுகின்றன என்ற பேராயர் Chaput, அக்குழந்தைகள் உண்மையிலேயே வேண்டப்படாதவை என்பதாலும் கொல்லப்படுகின்றன என்று தெரிவித்தார்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் துன்பநிலை பற்றி எடுத்துரைத்த அவர், இக்குழந்தைகள், அமெரிக்க சமுதாயத்திற்குச் சுமை அல்ல, மாறாக, அவை சமுதாயத்துக்கு விலைமதிப்பில்லாத கொடையாகும், நமது சமுதாயத்தின் உண்மையான பொருளைக் கண்டுணரக்கூடிய வாயிலாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
இஞ்ஞாயிறன்று நடைபெற்ற 13வது கர்தினால் O’Connor கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய போது இவ்வாறு கூறினார் Philadelphia பேராயர் Chaput







All the contents on this site are copyrighted ©.