2012-01-16 14:41:56

திருத்தந்தையின் மூவேளை செப உரை


சன.16,2012. இளையோர் ஒவ்வொருவரும் தனி மனிதராக தங்கள் வளர்ச்சியில் மட்டுமல்ல, இறை அழைப்பிற்கு பதிலுரைக்கும் வழியிலும் மேம்பாட்டைக் கண்டுகொள்ள சமூகத்தின் அனைத்துப் படியிலுள்ளோரும் உதவவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தேவ அழைத்தலைக் குறித்து உரைக்கும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை மேற்கோள்காட்டி தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, இறைவனுக்கும் அவரின் மக்களுக்கும் பணி செய்வதற்கான சிறப்பு அர்ப்பண அழைப்பில் இளையோர் பதிலுரைக்க உதவுவதில் ஆன்மீக வழிகாட்டிகளின் பங்கை தான் வலியுறுத்திக் கூற விரும்புவதாகத் தெரிவித்தார். அதேவேளை ஒருவரின் அழைப்பில் குடும்பங்கள் ஆற்றும் சிறப்புப் பணியையும் சுட்டிக்காட்டினார் அவர்.
மூவேளை செப உரையை ஆற்றி, மக்களாடு இணைந்து செபித்த பின், உலகக் குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம் குறித்த தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அமைதியில் வாழும் நோக்கில் புது இடங்களைத் தேடி குடிபெயர்வோர் இவர்கள் என்றார்.
இம்மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட உள்ள கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான செப வாரம் குறித்தும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளிடையே முழு ஐக்கியம் எனும் கொடை கிட்ட அனைவரும் செபிக்குமாறும் விண்ணப்பித்தார்.








All the contents on this site are copyrighted ©.