2012-01-13 15:52:39

மியான்மாரில் 651 கைதிகள் விடுதலை


சன.13,2012. மியான்மாரில், அரசுத்தலைவர் தெய்ன் செய்னின் சிறப்புப் பொது மன்னிப்பின் அடிப்படையில், அரசியல் கைதிகள் உட்பட 651 கைதிகள் இவ்வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்தது.
மியான்மாரில், 1988ம் ஆண்டில் இடம் பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான எழுச்சியில் கைது செய்யப்பட்ட தலைவர்களில் ஒருவரான Min Ko Naing, 2004ம் ஆண்டு எழுச்சியில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் Khin Nyunt, புத்தமதத் துறவிகள், மாணவர் தலைவர்கள் உட்பட 651 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மியான்மார் அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுப் பேசியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கி, மியான்மார் மீதான மேற்கத்தியப் பொருளாதாரத் தடை அகற்றப்படுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.
தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லையெனினும், இந்த மன்னிப்புக்கு முன்னர், அந்நாட்டில் 600 முதல் 1,500 வரையிலும் மனச்சான்றின் கைதிகள் இருந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன







All the contents on this site are copyrighted ©.