2012-01-13 15:50:48

கடந்த ஆண்டில் வத்திக்கான் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்துக்கு அதிகம்


சன.13,2012. கடந்த ஆண்டில் வத்திக்கான் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை வரலாற்றில் இதுவரை இடம்பெறாத அளவுக்கு அதிகமாக இருந்ததாக, திருப்பீடச் சார்பு தினத்தாள் L’Osservatore Romano அறிவித்தது.
2011ம் ஆண்டில் 50 இலட்சத்துக்கு அதிகமானோர் வத்திக்கான் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளனர் என்று அத்தினத்தாள் கூறியது.
எனினும், பிரான்சின் பாரிசிலுள்ள Louvre அருங்காட்சியகத்தைப் ஆண்டுதோறும் சுமார் 85 இலட்சம் பேர் பார்வையிடுகி்னறனர் என்றும் அத்தினத்தாள் கூறியது.
வத்திக்கான் அருங்காட்சியகத்திற்குச் சென்ற மக்களின் எண்ணிக்கை போன்றே, இலண்டன் பிரித்தானிய அருங்காட்சியகம், St.Petersburg லுள்ள Hermitage, மத்ரித்திலுள்ள Prado ஆகியவற்றிற்குச் சென்றவர்களின் எண்ணிக்கையும் உள்ளது என்றும் அத்தினத்தாள் கூறியது.







All the contents on this site are copyrighted ©.