2012-01-13 15:49:49

ஒரே பாலினத் திருமணங்கள், சமய சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் – அமெரிக்கச் சமயத் தலைவர்கள்


சன.13,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில், திருமணம் என்பதற்கு மறுவிளக்கம் கொடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை, “சமய சுதந்திரத்திற்குப் பரவலாகக் கடும் விளைவுகளை” ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் பல சமயத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட சமயத் தலைவர்கள் இணைந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் இவ்வியாழனன்று எழுதியுள்ள திறந்த கடிதத்தில் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
இயற்கையான திருமணம் குறித்த விளக்கத்தில் ஒரேபாலினத் திருமணமும் இணைக்கப்பட்டால், அதைப் புதியத் திருமண உறவாக ஏற்றுக்கொள்ள அரசுகள் வலியுறுத்தப்படும் நிலையில், அப்புதிய விளக்கத்தை பல சமூகங்கள் மனச்சான்றின்படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாத முரண்பாடு தோன்றும் என சமயத் தலைவர்கள் கூறினர்.
திருமணமும் சமய சுதந்திரமும், அடிப்படையான நன்மைக்கூறுகள் எனக் குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், இவை வாழ்ந்தாலும் ஒன்று சேரும், வீழ்ந்தாலும் ஒன்று சேரும் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
திருமணத்திற்குச் சமூகரீதியாகக் கொடுக்கப்படும் விளக்கத்தை மாற்றுவது, அந்தத் திருமணப் பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சட்டங்களில் மாற்றம் ஏற்படும் என்றும் அக்கடிதம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.