2012-01-12 15:01:44

ஈராக் நாட்டு கிர்குக் நகரில் பேராயர் இல்லத்தின் மீது தாக்குதல்


சன.12,2012. ஈராக் நாட்டு கிர்குக் நகரில் அமைந்துள்ள கல்தேய ரீதிப் பேராயர் லூயிஸ் சாகோ அவர்களின் இல்லம் இப்புதனன்று தாக்கப்பட்டது.
பாக்தாதிலிருந்து வந்ததாகக் கருதப்படும் மூன்று தீவிரவாதிகள் பிற்பகல் 1 மணி அளவில் மேற்கொண்ட இத்தாக்குதலில், பேராயரும், ஆயர் இல்லத்தில் இருந்தவர்களும் எந்த பாதிப்புக்களுக்கும் உள்ளாகவில்லை. தாக்குதலை மேற்கொண்ட மூவரில் இருவர் கொல்லப்பட்டனர். மூன்றாவது ஆள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், பேராயரின் இல்லத்திற்கு அருகில் வாழும் ஈராக் பாராளு மன்ற உறுப்பினர் Jala Niftajiயின் இல்லம் தாக்குதலின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் ஊடகங்கள் கணிக்கின்றன.
இத்தாக்குதல் நடப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் பேராயர் சாகோவும் பிற குருக்களும் அன்னை மரியா பங்குக் கோவிலுக்குச் சென்று திரும்பியதாக ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஈராக்கில் தற்போது வலுவான அரசு இல்லாததால் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.