2012-01-11 15:22:40

இல்லங்களில் பணிபுரிவோருக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும் - இந்தியத் துறவியர்


சன.11,2012. இல்லங்களில் பணிபுரிவோருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று இந்தியத் தலத்திருஅவையின் துறவியர் வலியுறுத்தி வருகின்றனர்.
இல்லங்களில் பணிபுரிவோருக்கு பணிபாதுகாப்பு, உடல்நல பாதுகாப்பு ஆகியவை இல்லாததால் அவர்கள் பெருமளவு தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அருள்சகோதரி Rosily Panjikaren கூறினார்.
இத்திங்களன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் 600க்கும் அதிகமான இல்லப் பணியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஊர்வலத்தில் இந்தியாவின் பல்வேறு துறவியரும் கலந்துகொண்டனர்.
இல்லங்களில் பணிசெய்வோரே இந்தியாவில் பெருமளவில் அநீதிகளைச் சந்தித்து வருகின்றனர் என்று இறைவார்த்தை துறவு சபையின் தலைவரான அருள்தந்தை நிக்கோலஸ் மார்திஸ் கூறினார்.
இந்திய அரசு இப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையில் 25,000 கையெழுத்துக்களைப் பெறும் ஒரு முயற்சியில் அருள்சகோதரி Panjikaren இறங்கியுள்ளார்.
அருள்சகோதரியின் இந்த முயற்சிக்கு தன் ஆதரவு உண்டு என்று இந்தூர் பணித்துறை உதவி கமிஷனர் R.G. பாண்டே கூறினார்.








All the contents on this site are copyrighted ©.