2012-01-09 14:52:27

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது சூடான் மற்றும் நைஜீரியாபில் அதிகரித்துள்ளது


சன.09,2012. கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது சூடான் மற்றும் நைஜீரியாவில் கடந்த ஆண்டு பெரிய அளவில் அதிகரித்திருந்ததாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் உரிமைகள் மீறப்பட்ட 50 நாடுகளுள் சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இது மிகப்பெரும் அளவில் அதிகரித்திருந்ததாக 'Open Doors' என்ற கிறிஸ்தவ மையம் எடுத்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் இவ்வாய்வறிக்கை, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதில் கடந்த பத்தாண்டுகளாக வடகொரிய நாடே முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
சூடான், நைஜீரியா தவிர எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் சித்திரவதைப்படுத்தப்படுவது கடந்த ஆண்டில் அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் சித்ரவதைச் செய்யப்படும் 50 நாடுகளுள் 38 நாடுகள் இஸ்லாமியரை பெரும்பான்மையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.