2012-01-06 15:14:07

துரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிப்படையும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை


சன.06,2012. பிட்ஸா, பர்கர் உள்ளிட்ட “பாஸ்ட் புட்” எனப்படும் துரித உணவுகளை உட்கொள்ளும் சிறாரின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவ்வகை உணவுகளில் உள்ள Trans fats எனப்படும் கொழுப்பே இதற்குக் காரணம் என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், இந்தக் கொழுப்பு அதிகமுள்ள கேக், பிட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளையோருக்கு உயிரணு எண்ணிக்கையிலும் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அன்றாட உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.