2012-01-05 15:56:24

கவிதைக் கனவுகள் - முல்லைப் பெரியாறு அணை


வெள்ளை இனத்தில்
வெளிப்பட்ட
வெளிச்சக் கீற்றாய்
வந்த ஜான் பென்னி குயிக் (John Pennycuick)
தன் கடைசி 'பென்னி' வரை
செலவிட்டுக் கட்டிய
முல்லைப் பெரியாறு.
வெளிநாட்டில் பிறந்த
பென்னி குயிக்கிற்கு இருந்த
நாடுகடந்த நேசம்
நமக்கில்லாமல் போனதேன்..!
வேற்றுமையில் ஒற்றுமை
காணச் சொன்ன
நம் இந்தியாவில்
நம் ஒற்றுமையில் வேற்றுமையை
கிளப்பி விட்டவர்கள் யார்..?
சிந்திக்கத்தானே ஆறாம் அறிவு..?
அதைச் சிந்தையிலிருந்தே
அகற்றி விட்டது ஏன்?
எதிர்ப்புக் காட்ட எத்தனையோ வழிகள்!
அகிம்சா தோன்றிய தேசத்தில்
அமைதியையும் அகிம்சையையும்
கையாளுங்கள்...
அமைதியாய்ப் போனால்
அடங்கிப் போவது என்பதல்ல..?
அது அன்பின் வழி எனக் கொள்க..!
அது அன்னை தேசத்தின் மீதுள்ள
அபிமானம் எனக் கொள்க..!
அமைதியாய்ப் பேசி தீர்த்துக் கொள்க..!
விரைவில் நல்ல காலம் வரும்..!
அன்பால் கட்டுண்டு...
காத்திருப்போம்...
காலம் வரும் சாதிப்போம்..!







All the contents on this site are copyrighted ©.