2012-01-04 15:33:03

டில்லி உயர்மறைமாவட்டத்தில் இந்திய நாட்டுப் பண்ணின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்


சன.04,2012. நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்திய நாட்டுப் பண்ணைச் சிறப்பிக்கும் விதமாக, டில்லி உயர்மறைமாவட்டம் புத்தாண்டு நாளன்று ஒரு விழா எடுத்தது. இந்தியாவில் இத்தகைய ஒரு விழா எடுக்கும் முதல் அமைப்பு இதுவாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
Dheerendra Tyagi என்பவர் திரு இருதயப் பேராலய வளாகத்தில் மூவர்ணக் கோடியை ஏற்றியபின், சூழ இருந்த டில்லி துணை ஆயர் Franco Mulakkal மற்றும் குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இணைந்து நாட்டுப் பண்ணைப் பாடினர்.
இந்திய அரசு உருவாக்கியுள்ள பல்வேறு திட்டங்களால் இன்னும் அதிகமான மக்கள் பயன்பெறவும், கல்வி, சமுதாய விழிப்புணர்வு இவற்றின் வழியாக இந்நாட்டிற்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்யவும் தலத்திருஅவை எப்போதும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று டில்லி துணை ஆயர் Mulakkal கூறினார்.
கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்ளும் பணிகளின் எண்ணிக்கை அம்மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும், இதனால் இந்தியா பல வழிகளில் முன்னேறியுள்ளது என்றும் விழாத் தலைவர் தியாகி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.