2012-01-03 15:13:50

ஈராக்கில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 1,62,000 பேர் உயிரிழப்பு


சன.03,2012. ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கப் படைகளும் விலக்கி கொள்ளப்பட்டு வருவதால் குண்டுவெடிப்புகள் தினசரி நிகழ்வுகளாகி விட்டதாக கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.பி.சி எனப்படும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், ஈராக்கில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் எனவும், மீதமுள்ளவர்கள் பாதுகாப்புப்படையினர் எனவும், கடந்த 2008-2009ம் ஆண்டுகளில்தான் அதிக எண்ணிக்கையிலான உயிர்பலி ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.