2012-01-02 14:59:43

ஆண்டிறுதியில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நான்கு தாக்குதல்கள்.


சன 02, 2011. கிறிஸ்மஸ் காலத்தில் கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்ற நான்கு தாக்குதல்களும், மத அடிப்படைவாதிகள் மனித மாண்பை மதிக்காதப் போக்கைக் காண்பிக்கும் அதேவேளை, அம்மாநில அரசு தன் மௌனம் மூலம் இசைவு அளிப்பதையும் வெளிப்படுத்துகிறது என்றார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவை தலைவர் Sajan George.
கிறிஸ்மஸ் நாளன்று ஒரு தாக்குதலும் 28ம் தேதி மேலும் மூன்று தாக்குதல்களும் கிறிஸ்தவர்கள் மீது இந்து அடிப்படைவாதக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது பற்றி கவலையை வெளியிட்ட ஜார்ஜ், 2011ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 49 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் கூறினார்.
கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியுள்ளதுடன், உடலளவிலும் தாக்கியுள்ள இச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எவ்வித தண்டனையும் இன்றி தப்ப அனுமதிப்பது, மேலும் தாக்குதல்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவை தலைவர் Sajan George.








All the contents on this site are copyrighted ©.