2011-12-27 13:30:14

ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ அப்பகுதி ஆயர் அழைப்பு


டிச.27,2011. ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு தங்குமிடங்களை அமைக்க உதவுவதன் மூலம் அரசும், செல்வந்தர்களும், கிறிஸ்மஸ் உணர்வுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றார் ஹாங்காங் ஆயர் John Tong Hon.
மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டுமெனில் முதலில் சுயநலன்கள் கைவிடப்படவேண்டும் என்றார் அவர்.
தங்குவதற்கு வேறு இடம் கிடைக்காததால் மாடடைக்குடிலில் இயேசு பிறக்கவேண்டியிருந்ததைச் சுட்டிக்காட்டியஆயர், ஹாங்காங்கிலும் இன்று பலர் தங்குமிடமின்றி தவிப்பதாககவலையை வெளியிட்டார்.
ஒவ்வொரு குடும்பத்தின் தேவையாகவும் உரிமையாகவும் இருக்கும் உறைவிடம் என்பது அனைவருக்கும் கிட்ட, அரசும், செல்வந்தர்களும், தொழிலதிபர்களும் தங்களால் இயன்றஅனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் என்றார் ஆயர் Tong Hon.
மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்றகிறிஸ்மஸ் காலஉணர்வை ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்தினால் மேலும் நல்லதொரு உலகை படைக்கஒவ்வொருவரும் உதவமுடியும் என்றார் ஹாங்காங் ஆயர்.








All the contents on this site are copyrighted ©.