2011-12-26 14:01:18

ஜகார்த்தா உயர்மறைமாவட்டம் வறியோருடன் பகிர்ந்து கொண்ட கிறிஸ்மஸ் விருந்து


டிச.26,2011. சமுதாயத்திற்குச் சேவையாற்றும் உணர்வை மக்களில் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கிறிஸ்மஸ் பெருவிழா விருந்தை ஏறத்தாழ 1000 குழந்தைகள் மற்றும் முதியோருடன் பகிர்ந்துள்ளது இந்தோனேசியாவின் ஜகார்த்தா உயர்மறைமாவட்டம்.
San Edigio கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்விருந்தில் பெருமளவில் இஸ்லாமியச் சிறுவர்களும் முதியவர்களும் கலந்து கொண்டதாக இயேசு சபை குரு Alexius Andang Listya Binawan கூறினார்.
ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும், தேவையில் உள்ளோருக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்ற உணர்வை இத்தகைய செயல்பாடுகள் மூலம் சமுதாயத்திற்கு கற்பிக்க முயல்வதாக அருள்தந்தை Binawan எடுத்துரைத்தார்.
கிறிஸ்மஸ் பெருவிழாவின்போது பொட்டலங்காளாக உணவு வழங்குவதைக் காட்டிலும், ஒரு குடும்ப உணர்வுடன் வறியோருக்கு விருந்தளிப்பது சமூக கடமையுணர்வைக் கற்பிப்பதாக இருக்கும் என்று கூறிய அருள்தந்தை Binawan, இந்த விருந்து தொடர்பான செயல்களில் 700 தன்னார்வத் தொண்டர்கள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செயலாற்றியதையும் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.