2011-12-15 15:24:12

அணு உலைகளை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதை மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் - தென் கொரிய ஆயர்


டிச.15,2011. ஜப்பான் அரசு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தாலும், அணு சக்தி என்றும் ஆபத்து நிறைந்ததே என்று அணுசக்தி ஆய்வில் ஈடுபட்டுள்ள ஓர் ஆயவாளர் கூறினார்.
அணு உலைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள ஜப்பான் Kyoto பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு நிறுவனத்தில் பணி புரியும் Tetsuji Imanaka, தென் கொரியாவின் கத்தோலிக்க மையம் ஒன்றில் இப்புதனன்று அளித்த உரையில் இவ்வாறு கூறினார்.
ஜப்பானில் நில நடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட அணுக்கசிவினைச் சரிசெய்த அரசு, அதன்பின் விடுத்த ஓர் அறிக்கையில் அணு உலைகள் பாதுகாப்பானவை என்று கூறியிருப்பது முற்றிலும் உண்மையல்ல என்றும், பல நுணுக்கமான தகவல்களை அரசு வெளியிடவில்லை என்றும் ஆய்வாளர் Imanaka எடுத்துரைத்தார்.
கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் ஒரு சில ஆயர்கள், 100 குருக்கள் மற்றும் பொது நிலையினர் கலந்து கொண்டனர்.
தென் கொரியா அணு உலைகளை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதை மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று நீதி மற்றும் அமைதிக் குழுவின் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon எடுத்துரைத்தார்.
தென் கொரியாவில் தற்போது 21 அணு உலைகள் இயங்கி வருகின்றன என்றும், மேலும் 11 அணு உலைகள் அமைப்பதற்கு அரசு திட்டங்கள் தீட்டி வருகின்றது என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.