2011-12-13 15:19:34

2012ம் ஆண்டில் லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டம் மிகப்பெரிய அளவில் குவாதாலூப்பே அன்னை மரியா விழாவைக் கொண்டாடுவதற்குத் திட்டமிட்டுள்ளது


டிச.13,2011. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி குவாதாலூப்பே அன்னை மரியா விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவதற்கு லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டமும் Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பும் இணைந்து திட்டங்களை அறிவித்துள்ளன.
93 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட லாஸ் ஆஞ்சலெஸ் Coliseum அரங்கத்தில் இவ்விழாவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இத்திங்களன்று வெளியிட்ட லாஸ் ஆஞ்சலெஸ் பேராயர் ஹோசே கோமஸ், அக்கொண்டாட்டத்தின்போது, குவாதாலூப்பே அன்னை மரியா மீதான தங்களது பக்தியைப் புதுப்பிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், இலத்தீன் அமெரிக்காவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தாய் நற்செய்தியை விதைத்ததைத் தாங்கள் தொடர்ந்து ஆற்றுவதற்கு உறுதி எடுப்போம் என்றும் பேராயர் கோமஸ் அறிவித்துள்ளார்.
1531ம் ஆண்டில் புனித ஹூவான் தியோகோவிற்கு அன்னை மரியா காட்சி கொடுத்த போது அவரது மேலாடையில் அன்னைமரியின் திருவுருவம் அற்புதமாகப் பதிந்திருந்தது







All the contents on this site are copyrighted ©.