2011-12-10 14:53:39

சீனாவில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசம் ஒரு மனித உரிமைகள் அமைப்பு


டிச.10,2011. மனித உரிமைகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிலைமை 2011ம் ஆண்டில் சீனாவில் மிக மோசமாக இருந்ததாக சீனாவை மையமாகக் கொண்ட ஒரு மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட இவ்வமைப்பு, சீனாவில் அண்மைக் காலங்களின் நிலவரங்களை நோக்கும்போது இவ்வாண்டில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசமாக இருந்தது எனக் கூறியுள்ளது.
கட்டாயக் காணாமற்போதல்களும் சட்டத்திற்குப் புறம்பான கைதுகளும், குறிப்பாக இவ்வாண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரையில் இடம் பெற்ற “ஜாஸ்மின் எழுச்சி” தொடர்பான நிகழ்வுகளின் போது சீன அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் அதிகமாக இருந்ததாக அவ்வறிக்கை கூறியது.
கட்டாயக் காணாமற்போதல்களைச் சட்டப்படி அங்கீகரிக்க உதவும் குற்றப்பிரிவு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான பரிந்துரைகள் கவலை தருவதாக இருப்பதாகவும் CHRD என்ற இந்த அமைப்பு கூறியது.








All the contents on this site are copyrighted ©.