2011-12-09 15:12:54

டிச 10, 2011. வாழ்ந்தவர் வழியில் .... அப்துல்லா யூசூஃப் அலி


இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் 1872ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறநதார் இஸ்லாமிய அறிஞர் அப்துல்லா யூசூஃப் அலி. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பே இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இவர் மிகச்சிறு வயதிலேயே குரான் முழுவதையும் மனப்பாடமாகச் சொல்லும் வல்லமைப் பெற்றிருந்தார். அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்றிருந்த யூசுஃப் அலி, பல ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுள்ளார். புனித நூல் குரானை ஆழ்ந்து கற்று, அதனை மொழிபெயர்த்து, விளக்க உரையுடன் 1938ம் ஆண்டு அப்போது இந்திய பகுதியாக இருந்த லாகூரில் வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்த உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது, வட அமெரிக்காவின் மூன்றாவது மசூதி, கானடாவின் Edmontonல் கட்டப்பட உதவி புரிந்தார். பேரறிஞராக இந்திய மக்களால் மதிக்கப்பட்ட இவர், லாகூரின் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்ட யூசூஃப் அலி, 1953ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, தன் 81ம் வயதில் இலண்டனில் காலமானார். Brookwood இஸ்லாமியக் கல்லறையில் இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.