2011-12-05 14:47:13

மத விடுதலைக்கு எதிரான மலேசிய அரசின் சட்டப் பரிந்துரைக்கு எதிர்ப்பு


டிச.05,2011. மலேசிய அரசால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டப் பரிந்துரை, மத விடுதலையையும், மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு இருக்கும் உரிமையையும் மறுப்பதாக உள்ளது என எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர் அந்நாட்டு சிறூபான்மை மதத்தவர்.
புத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிச மதத்தவர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடைச்செய்யும் இந்த புதியச் சட்டப்பரிந்துரை, வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கியுள்ளது குறித்து தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் கூட்டம் நடத்துவதற்குத் தடைகளை விதிக்கும் சுதந்திரத்தைக் காவல் துறைக்கு வழங்கும் மலேசிய அரசின் இச்சட்டப்பரிந்துரை இப்புதனன்று மலேசிய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு முன் வைக்கப்பட உள்ளது.








All the contents on this site are copyrighted ©.