2011-12-03 15:35:46

குருக்களையும் கத்தோலிக்க விசுவாசிகளையும் தாக்கியுள்ளது வியட்நாம் காவல்துறை


டிச.03,2011. தலத்திருச்சபைக்குச் சொந்தமான நிலத்தில் நகரக் கழிவு நீர் அகற்றும் நிலையத்தைக் கட்ட முயலும் வியட்நாம் அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பம் ஒன்றை அரசிடம் கொடுத்த குருக்கள், பொதுநிலையினர் உட்பட்ட நூற்றுக்கணக்கானோரை வியட்நாம் காவல் துறை இவ்வெள்ளியன்று காலை தீவிரமாகத் தாக்கியுள்ளது.
தாய் ஹா என்ற பங்குதளத்தின் மக்களோடு இணைந்து அந்நகர் மக்கள் அமைப்பிற்குச் சென்று விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்து விட்டுத் திரும்பிய மக்களையும் குருக்களையும் தாக்கிய வியட்நாம் காவல்துறை, குருக்கள் Joseph Nguyen Van Phuong, Joseph Luong Van Long உட்பட சில குருக்களையும் ஏறத்தாழ 30 கத்தோலிக்கர்களையும் கைது செய்துள்ளது.
காவல் துறையின் தாக்குதலில் அதிக அளவில் காயமடைந்துள்ள குரு நுகுயென்னின் நிலை மிகக் கவலைக்குரியதாக இருப்பதாக வியட்நாம் தலத்திருச்சபை அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.