2011-12-02 15:30:30

கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே உலகில் அதிகமான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்


டிச.02,2011. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே உலகில் அதிகமான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்று இரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
இப்புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களும் மாஸ்கோ நகரில் ‘சமயச்சுதந்திரம் மற்றும் பாகுபாடுகளைக் காட்டுதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உலகெங்கும் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கத்தோலிக்கத் திருச்சபை, ஆர்த்தடாக்ஸ் மற்றும் பிற கிறிஸ்தவ சபைகள், இஸ்லாம், யூதம், ஆகிய பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் மத்திய கிழக்குப் பகுதிகள், ஆப்ரிக்கக் கண்டம், மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் பற்றி குறிப்பாகப் பேசப்பட்டது.
சராசரியாக, உலகெங்கும் 10 கோடி கிறிஸ்தவர்கள் வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்றும் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோர் ஆண்டும் மதவெறிக் கலவரங்களுக்குப் பலியாகின்றனர் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.