2011-11-29 14:01:06

அனைத்துலக மாணவர்களின் மேய்ப்புப்பணி அக்கறை குறித்த நான்கு நாள் உலக கருத்தரங்கு


நவ.29,2011. அனைத்துலக மாணவர்களின் மேய்ப்புப்பணி அக்கறை குறித்த நான்கு நாள் உலக கருத்தரங்கு இப்புதன் முதல் சனிக்கிழமை வரை உரோம் நகரில் இடம்பெறுகிறது.
'அனைத்துலக நாடுகளின் மாணவர்களும் கலாச்சாரங்களின் சந்திப்பும்' என்ற தலைப்பில் குடியேற்றதாரருக்கான திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், அவ்வவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò, அவ்வவை செயலர் ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில், கத்தோலிக்கக் கல்விக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Zenon Grocholewski ஆகியோருடன் பல கிறிஸ்தவ சபைகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
' கலாச்சாரமும் நற்செய்தியும்', 'கலாச்சாரங்களின் சந்திப்பும், பள்ளி மற்றும் பல்கலைகழகங்களில் நற்செய்தி அறிவிப்பும்', 'கலாச்சாரமும் கல்வியும்', 'சர்வதேச மாணவர்களுக்கான மேய்ப்புப்பணி தேவை மற்றும் சவால்கள்' 'உலகமயமாக்கப்பட்ட சமுதாயத்தில் இளையத் தலமைத்துவத்தின் எடுத்துக்காட்டு' போன்ற தலைப்புகளில் இந்த நான்கு நாள் கருத்தங்கில் விவாதங்கள் இடம்பெற உள்ளன.








All the contents on this site are copyrighted ©.