2011-11-18 16:12:32

சிறைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் கடும் பாகுபாடுகள்


நவ.18,2011. பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சிறைகளில் ஆபத்தான நிலைகளை எதிர்நோக்குவதாகவும் கடும் பாகுபாடுகளால் துன்புறுகின்றனர் எனவும் உள்ளூர் கத்தோலிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் பேசிய Faisalabadல் பணி செய்யும் வழக்கறிஞர் Moazzam Aslam Bhatti, உணவு, உடை, மருந்துகள் ஆகியவற்றைப் பெறுவதிலும், தங்களது மத நம்பிக்கைகளைச் செயல்படுத்துவதிலும் சிறைகளிலுள்ள கிறிஸ்தவர்கள் பாகுபாடுகளைச் சந்திக்கிறார்கள் என்று கூறினார்.
இந்த நிலை மாறுவதற்குச் சட்டரீதியான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Faisalabad நகரில் சுமார் 5,000 கைதிகள் உள்ளனர். இவர்களில் 85 முதல் 100 பேர் கிறிஸ்தவர்கள் என்று, Faisalabad மறைமாவட்ட சிறைக் கைதிகள் நலன் குறித்த பணிக்குழுத் தலைவர் அருள்தந்தை Iftikhar Moon கூறினார்.








All the contents on this site are copyrighted ©.