2011-11-15 14:33:02

1930களில் திபெத்திய மொழியில் எழுதப்பட்ட திருமறை நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன


நவ.15,2011. 1930களில் திபெத்திய மொழியில் எழுதப்பட்ட திருமறை நூல்களும் அன்னைமரியாவின் வாழ்க்கை வரலாறும் நல்ல நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
இந்தக் கண்டுபிடிப்புக்கள் பற்றிக் கூறிய ஃபீதெஸ் செய்தி நிறுவனம், திபெத்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருமறை நூல்களின் 45 தொகுப்புகள் 1931ம் ஆண்டில் வெளியிடப்பட்டன என்றும், 489 தொகுப்புக்களைக் கொண்ட அன்னைமரியாவின் வரலாறு 1932ம் ஆண்டில் வெளியிடப்பட்டன என்றும் கூறியது.
மேலும், திபெத்திய மொழியில் இத்தகைய நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ள கத்தோலிக்க நூல்கள் இவை மட்டுமே என்று வல்லுனர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திபெத்திலுள்ள ஒரே கத்தோலிக்கப் பங்குத்தளமான Mang Kangல் இந்நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பங்குத்தளத்தை 1855ம் ஆண்டில் பாரிஸ் மறைபோதக சபையினர் உருவாக்கியுள்ளனர். 1865ம் ஆண்டு முதல் 1959ம் ஆண்டு வரை 17 மறைபோதகர்கள் பணி செய்துள்ளனர். இவர்களில் ஏழுபேர் பொதுநிலை விசுவாசிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பங்குத்தளமானது 1988ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.