2011-11-12 07:12:25

நவ 12, 2011. வாழ்ந்தவர் வழியில் .... வல்லிக்கண்ணன்


தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரான வல்லிக்கண்ணன் திருநெல்வேலி மாவட்டம், இராஜவள்ளிபுரத்தில் 1920ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி. நாவல், கவிதை, நாடகம், சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என பல துறைகளில் ஈடுபட்டார் வல்லிக்கண்ணன். ஆனால் அவர் மிகப்பெரிய வெற்றி பெற்றது கட்டுரைத் துறையில் தான்.
சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன், ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று பணிபுரிந்துள்ளார்.
30 வயதிற்குள் இவரின் 25 நூல்கள் வெளிவந்துவிட்டன. 60 வயதிற்குள் மேலும் 20 நூல்கள் பதிப்பைக் கண்டிருக்கின்றன. மீதி 30 நூல்கள் இவர் சென்னையில் வாழ்ந்த இறுதி காலத்தில் வெளிவந்தவை. இவ்வாறு மொத்தம் 75 நூல்களை, தன் 86 வயதுக் காலத்தில் அவர் எழுதியுள்ளார். எண்ணிக்கையில் 75 நூல்களை எழுதியிருந்தாலும் 'பாரதிதாசனின் உவமை நயம்' , 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' , 'சரஸ்வதி காலம்' , 'பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை' ஆகியவை வல்லிக்கண்ணனின் வலிமை மிக்க அடையாளங்கள். இவருக்கு சாகித்திய அகாதமி விருது 1978ம் ஆண்டு வழங்கப்பட்டது.
எழுத்தாளர் வல்லிக்கண்ணன் தன் 86ம் வயதில் 2006ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி சென்னையில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.