2011-11-11 15:29:18

கேரளாவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருவது குறித்து தலத்திருச்சபை கவலை


நவ.11,2011. இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடன் சுமையால் துன்பப்படும் விவசாயிகளுக்குத் தலத்திருச்சபை பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருவதையும் விடுத்து அம்மாநிலத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர் என்று தலத்திருச்சபை தனது கவலையை வெளியிட்டுள்ளது.
நிதிப் பிரச்சனையால் மக்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது மிகவும் வருந்துதற்குரியது என்று Mananthavady மறைமாவட்டப் பேச்சாளர் அருட்பணி Thomas Therakam கூறினார்.
கடந்த வாரத்தில் Wayanad மாவட்டத்தில் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்ததையடுத்து இவ்வாறு கூறினார் அருட்பணி Therakam.
Wayanad மாவட்ட அறிக்கையின்படி, அறுவடை பொய்த்ததால் 2001ம் ஆண்டுக்கும் 2007ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 300க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.