2011-11-03 14:51:37

இயற்கைப் பேரிடர்களில் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் இழப்பது பெரும்பாலும் ஏழை மக்களே - சான் சால்வதோர் பேராயர்


நவ.03,2011. கால நிலையில் உருவாகி வரும் மாற்றங்களே மனித குலம் சந்தித்து வரும் மிகப் பெரும் சவால் என்று தென் அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
கால நிலை மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் உலக அரசுகள் பல தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எல் சால்வதோர் நாட்டின் அரசுத் தலைவர் Maruricio Funes அண்மையில் ஓர் அழைப்பை விடுத்தார்.
இதனை முற்றிலும் ஆதரித்துப் பேசிய சான் சால்வதோர் பேராயர் Jose Luis Escobar Alas, இந்த மாற்றங்களை உருவாக்கி வரும் தொழில்மயமாகியுள்ள நாடுகள் இந்தப் பிரச்சனையைக் களைவதற்கு தீவிர முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எல் சால்வதோர் உட்பட ஒரு சில மத்திய அமெரிக்க நாடுகளில் வீசிய கடும் புயலை அடுத்து, அப்பகுதியில் நடைபெற்ற ஓர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட எல் சால்வதோர் அரசுத் தலைவர் Funes, தன் கருத்தை வெளியிட்டு, வருங்காலத்தில் வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க அனைவரும் முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல பகுதிகளையும் தாக்கி வரும் இயற்கைப் பேரிடர்களில் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் இழப்பது பெரும்பாலும் ஏழை மக்களே என்பதை எடுத்துரைத்த பேராயர் Escobar, உலகளாவிய முறையில் அரசுகள் தீமானத்திற்கு வரும்வரையில் காத்திருக்காமல், ஒவ்வோர் அரசும் ஏழை மக்களின் வாழ்வை உயர்த்த தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.