2011-11-01 14:51:15

மத்திய அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பின் உதவி


நவ.01,2011. மத்திய அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் டாலர்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பு.
மெக்ஸிகோ, ஹொண்டுராஸ், எல் சால்வதோர், நிக்காராகுவா, பானமா மற்றும் கோஸ்ட ரிக்காவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள 12 இலட்சம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்த உதவிப்பணத்தை அனுப்புவதாக இஸ்பானிய காரித்தாஸ் அமைப்பு கூறியது.
ஏற்கனவே இஸ்பானிய காரித்தாஸ் அமைப்பு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மத்திய அமெரிக்க நாடுகளின் நீண்ட கால உதவித் திட்டங்கள் குறித்து ஆய்வுச் செய்ய வல்லுனர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.