2011-11-01 14:50:29

ஒழுக்க ரீதி மதிப்பீடுகள் குறைந்து வருவதே, பொருளாதார நெருக்கடிக்கான காரணம் என்கிறார் கர்தினால்


நவ.01,2011. தனி மனிதர்களிலும் நிறுவனங்களிலும் ஒழுக்க ரீதி மதிப்பீடுகள் குறைந்து வருவதே, தற்போது உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணம் என்றார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
உலகப் பொருளாதாரம் சரியான முறையில் இயங்க வேண்டுமெனில் பகுத்தறிவுவாதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட அடிப்படை மதிப்பீடுகளும், பொது நன்னெறிக் கோட்பாடுகளும் தேவைப்படுகின்றன என்றார் கர்தினால் கிரேசியஸ்.
தொழில்துறை என்பது பொறுப்பான நிர்வாகத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், அறநெறி சார்ந்த தவறுகளுக்கு பொறுப்பை ஏற்பதும், சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்வுடன் செயல்படுவதும் தொழில்துறைக்கு மிகவும் அவசியம் என்றும் கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.