பழைய ஏற்பாட்டின் மூன்று முக்கிய நபர்கள் குறித்த திரைப்படங்கள்
அக்.31,2011. பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்களான நோவா, மோசே மற்றும் யூதா மக்கபே ஆகிய
மூவர் குறித்தும் பெரும் பொருட்செலவில் திரைப்ப்டங்களை உருவாக்க உள்ளதாக ஹாலிவுட்டின்
இரு முக்கிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நோவாவை மையப்படுத்திய திரைப்படத்தை புதிதாக
எடுக்க உள்ளதாக பேராமவுண்ட் பிக்சர்ஸ் அறிவித்துள்ள அதேவேளை, மோசே குறித்த திரைப்படத்தை
'கடவுள்களும் மன்னர்களும்' என்ற தலைப்பில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கைக் கொண்டும், யூதா மக்கபே
என்ற திரைப்படத்தை மெல் கிப்சனைக் கொண்டும் இயக்க உள்ளதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும்
அறிவித்துள்ளது.