2011-10-29 16:36:34

கொல்கத்தாவின் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை


அக் 29, 2011. கொல்கத்தாவின் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றே நாட்களில் 29 குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அறிவித்துள்ளார் இந்தியாவின் Asansol ஆயர் சிப்ரியன் மோனிஸ்.
அரசு மருத்துவமனையில் இடம்பெற்ற குழந்தைகளின் திடீர்ச் சாவுகளுக்கு அரசு பொறுப்பேற்பதுடன், இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஆயர் மோனிஸ்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் அவசரச் சிகிச்சைகளை வழங்கும் வசதி திருச்சபையிடம் இல்லையெனினும், குழந்தை இறப்புகளை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வுத் திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்த உள்ளதாக ஆயர் மோனிஸ் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.