2011-10-22 15:00:00

எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்து சர்வதேச சமுதாயம் புலன்விசாரணை செய்வதைத் தவிர்க்க காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் அழைப்பு


அக்.22,2011. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமுதாயம் புலன்விசாரணை செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளைப் புறக்கணித்துள்ளார் எகிப்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda.
கெய்ரோவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவது, தாங்கள் வலியுறுத்தி வரும் தேசிய ஒற்றுமைக்குப் பாதகமாக அமையும் என்றும் முதுபெரும் தலைவர் Shenouda மேலும் கூறினார்.
இவ்வன்முறையில் பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினர் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்ததையொட்டி இவ்வாறு கூறினார் அத்தலைவர்.
கெய்ரோவில் இம்மாதம் 9ம் தேதி காப்டிக் கிறிஸ்தவர்கள் அமைதியாக மேற்கொண்ட ஊர்வலத்தில் இடம் பெற்ற கலவரத்தில் சுமார் 28 பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.