2011-10-22 14:58:02

இரஷ்ய மொழியில் முதன் முறையாக உலக மறைபோதக ஞாயிறு


அக்.22,2011. கஜகஸ்தான் குடியரசில் முதன் முறையாக இரஷ்ய மொழியில் உலக மறைபோதக ஞாயிறு சிறப்பிக்கப்படவிருக்கின்றது என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
கஜகஸ்தான் குடியரசில் 2008ம் ஆண்டில் பாப்பிறை மறைபோதகக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்நாட்டில் உலக மறைபோதக ஞாயிறு குறித்த விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்தும் வண்ணம் அஞ்ஞாயிறின் முக்கியத்துவம் குறித்த விபரங்களை இரஷ்ய மொழியில் அந்நாடெங்கும் அனுப்பியிருப்பதாக இக்கழகங்களின் தேசிய இயக்குனர் அருட்பணி பொனவெந்தூர் காரோஃபாலோ கூறினார்.
அக்டோபர் 23ம் தேதியான இஞ்ஞாயிறன்று திருச்சபையில் 85வது உலக மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுகின்றது.
2009ம் ஆண்டில் வெளியான புள்ளி விபரங்களின்படி உலகில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 118 கோடியே 6 இலட்சத்து 65 ஆயிரம் ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகம்.







All the contents on this site are copyrighted ©.