2011-10-20 15:05:16

அக்டோபர் 21 வாழ்ந்தவர் வழியில்.... ஆல்ஃபிரட் நொபெல்


சுவீடன் நாட்டு ஸ்டாக்கோமில் 1833ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பிறந்த ஆல்ஃபிரட் நொபெல் (Alfred Bernhard Nobel), நொபெல் விருதை உருவாக்கிய அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். இவர் ஒரு வேதியாலாளர், பொறியாலாளர் மற்றும் ஆயுதத் தயாரிப்பாளர். இவர், போப்பர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். 1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் வெளியான "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார் ஆல்ஃபிரட் நொபெல். முன்பைவிட தற்போது மக்களை அதிவேகமாகக் கொல்லும் முறைகளைக் கண்டுபிடித்து பெரிய பணக்காரரான ஆல்ஃபிரட் நொபெல் நேற்று இறந்தார் என்றும் அந்த இறப்புச் செய்தியில் இரங்கல் தெரிவித்திருந்தது அத்தினத்தாள். இவர் டைனமைட்டைக் கண்டுபிடித்ததற்காக அச்செய்தித்தாள் இவரைக் கண்டித்தும் எழுதியிருந்தது. ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். எனவே தனது இறப்பு பற்றிய அச்செய்தி நொபெலை துணுக்குறச் செய்தது. இதில் ஏமாற்றமடைந்த ஆல்ஃபிரட் நொபெல், தனது இறப்புக்குப் பின்னர் தான் நினைவுகூரப்படுவது பற்றிச் சிந்தித்தார். இதனால் தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நொபெல் விருதை நிறுவினார். இவரின் நினைவாக நொபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது. ஆல்ஃபிரட் நொபெல் தனது 63 வது வயதில் 1896ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இத்தாலியின் சன்ரேமோ மாளிகையில் காலமானார். பலவித புகையற்ற இராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நொபெலால் தொடரப்பட்டிருந்தது. நொபெல் தனது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.
மார்ச் 2005ம் ஆண்டு வரை 770 நொபெல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.