2011-10-19 15:42:27

அக்டோபர் 20. வாழ்ந்தவர் வழியில்........ கவிஞர் குண்டூரு சேஷாந்திர சர்மா


யுக கவி என அறியப்படும் தெலுங்கு கவிஞர் குண்டூரு சேஷாந்திர சர்மா 1927ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ஆந்திராவில் பிறந்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்ற இவர், ஆந்திர அரசுப்பணியாளராக சேவையாற்றி, ஹைதராபாத் நகராட்சி ஆணையராக பணி ஓய்வு பெற்றார். இவரின் கவிதைகள் ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதைத் தொகுப்புகள், இலக்கிய விமர்சனம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. 'நா தேசம்', 'நா பிரஜலு' அதாவது 'என் நாடு', 'என் மக்கள்' என்ற இவரின் படைப்புகளே இவரை இந்தியாவின் மிகப்பெரும் கவிஞர்களுள் ஒருவர் என அடையாளம் காட்டின. சாகித்திய அக்காடமி, சாகித்திய இரத்னா, காளிதாஸ் சம்மன், லோகமான்ய திலக் என்பவை உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள சர்மா, 2004ம் ஆண்டின் நொபெல் இலக்கிய விருதுக்கென பரிந்துரைக்கப்பட்டு நியமனம் பெற்றவர்களுள் ஒருவர்.
கவிஞர் சர்மா 2007ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.