2011-10-18 14:55:51

பெய்ஜிங் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட குருக்களும் துறவியரும்


அக்.18,2011. சீனாவின் பெய்ஜிங் நகரில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில், பிறரன்புப் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன், 52 அருள் சகோதரிகள், நான்கு குருக்கள் மற்றும் இரண்டு துறவு சபை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
சீனாவில் பணியாற்றும் Jinde Charities என்ற அரசுசாரா கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம் "பிறரன்புச் சேவைக்கான பந்தயம்" என்ற முயற்சியை இந்த மாரத்தான் போட்டிகளின்போது மேற்கொண்டது.
இந்தப் பிறரன்பு முயற்சிக்கு ஆதரவாக, குருக்களும் துறவியரும் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் குறுகிய மாரத்தான் நிகழ்ச்சியை முடித்தனர். Ye Fei என்ற குருவும், Li Min, Zhang Reijuan என்ற இரு அருள்சகோதரிகளும் இந்த மாரத்தானின் முழுமையான 42 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி முடித்தனர்.
இதற்கிடையே, இந்தியாவில் பிறந்து, தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் Fauja Singh என்ற நூறு வயது மனிதர் அக்டோபர் 16, இதே ஞாயிறன்று Toronto நகரில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு முழு தூரத்தையும் கடந்ததால் Guinness உலகச் சாதனை படைத்துள்ளார்







All the contents on this site are copyrighted ©.