2011-10-17 16:08:08

அக்டோபர் 18 வாழ்ந்தவர் வழியில்.... சார்லஸ் பாபேஜ்


“அறிவு வளர வளர, ஒவ்வொரு புதிய கருவியும் கண்டுபிடிக்கப்படும் போது மனித உழைப்பு சுருங்குகிறது”.
இம்மாதிரியான பல அறிவியல் சார்ந்த கூற்றுக்களைச் சொல்லியிருப்பவர் சார்லஸ் பாபேஜ் (Charles Babbage). 1791ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இலண்டனில் பிறந்த இவர், ஆங்கிலேய கணிதவியலாளர், மெய்யியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிற்நுட்ப பொறியியலாளர். இவர் இன்றைய கணனிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர். சார்லஸ் பாபேஜ் திட்டமிட்டபடி, 1991ல் பிரித்தானிய அறிவியலாளர்கள் difference engine னை வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது. சார்லஸ் பாபேஜ் 1871ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி இலண்டனில் காலமானார். இவரது கண்டுபிடிப்புக்களில் இந்திய எண்ணங்களின், குறிப்பாக இந்திய லாஜிக்கின் தாக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இரயில் வண்டியின் டைனமோ மீட்டர், இரயில் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை, கலங்கரை விளக்கு ஒளி, சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி ஆகியவை சார்லஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகளாகும்







All the contents on this site are copyrighted ©.