2011-10-08 14:32:30

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈரானியக் கிறிஸ்தவப் போதகரின் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு உரத்த குரல் எழுப்ப அழைப்பு


அக்.08,2011. தனது கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஈரானியக் கிறிஸ்தவப் போதகரின் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு உருக்கமாகச் செபிக்கவும் உரத்த குரல் எழுப்பவும் வேண்டுமென Aid to the Church in Need என்ற அமைப்பின் பிரிட்டன் இயக்குனர் Neville Kyrke-Smith கேட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான 35 வயதாகும் Yusuf Nadarkhani என்ற போதகர், தனது சபையைப் பதிவு செய்ய முயன்ற போது 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
2010ம் ஆண்டு செப்டம்பரில் சமய எதிர்ப்புக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவரது வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
இதையொட்டி Yusufன் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு உருக்கமாகச் செபிக்கவும் உரத்த குரல் எழுப்பவும் வேண்டுமென கேட்டுள்ளார் Smith.
ஈரானில் 1970களில் ஒரு இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரமாக இருக்கின்றது என்று Aid to the Church in Need கூறியது







All the contents on this site are copyrighted ©.