2011-10-03 15:39:38

காந்தியின் 142வது பிறந்தநாள் விழாவில் குவகாத்திப் பேராயர்


அக்.03,2011. உலகின் பல நாடுகள் காந்தியின் கொள்கைகள் மீது கூடுதலான ஆர்வம் காட்டி வரும் வேளையில், இந்தியாவில் உள்ள நாம் அவரை மறந்து வருகிறோம் என்று குவகாத்திப் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் கூறினார்.
காந்தியின் 142வது பிறந்தநாளை இஞ்ஞாயிறன்று புதுடில்லியில் கொண்டாடியபோது, அங்கு கூடியிருந்த பல காந்தியவாதிகளின் மத்தியில் உரையாற்றிய பேராயர் மேனம்பரம்பில், இந்தியாவின் அடிப்படை உண்மைகளில் ஒன்றான அகிம்சை என்ற தத்துவத்தை உலகறியச் செய்தவர் காந்தி என்று கூறினார்.
பல்வேறு சமயங்கள், கலாச்சாரங்கள், கட்சிக் கொள்கைகள், மாநிலக் கொள்கைகள் என அனைத்து எண்ணங்களுக்கும் மதிப்பு அளித்த காந்தி, கலாச்சாரங்களின் சங்கமத்தில் எவ்வாறு வாழ்வதென்பதை நமக்குச் சொல்லித் தந்தார் என்று பேராயர் மேனம்பரம்பில் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
Gandhi Smriti மற்றும் Dharshan Samiti என்றழைக்கப்படும் ஒரு அமைப்பின் உதவி இயக்குனரான காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டசார்ஜி புது டில்லியில் நடத்தப்பட்ட இச்சிறப்புக் கூட்டத்திற்கு பேராயர் மேனம்பரம்பிலை அழைத்திருந்தார்.
இக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், புது டில்லியின் முதலமைச்சர் ஷீலா திக்ஷித் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்







All the contents on this site are copyrighted ©.